
சுவிஸ் வாழ் விஜி ஜீவா தம்பதியினரால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது வீடு!

சுவிஸ் நாட்டில் வசிக்கும் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சமூக சேவையாளர் விஜயகுமாரன் (விஜி) குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைக்கப்படுகின்றது.
பொத்துவில் இராவணன் விழுதுகள் அமைப்பு கல்முனை பிராந்திய இளைஞர் சேனையிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த இல்லம் பொத்துவில் பிரiதேசத்தில் அமைக்கப்படுகின்றது இதற்கான அடிக்கல் அண்மையில் நடப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
திருமதி. குபேரலெட்சுமி விஜயகுமாரன்(ஜீவா) அவர்களின் தந்தையார் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த மற்றும் அதிபராக கடமையாற்றிய பொத்துவில் பிரதேசத்தில் அவரது நினைவாக பொத்துவில் இஞ்பெக்ட்டர் ஏத்தம் கிராமத்தில் வசிக்கும் வறிய குடும்பத்திற்காகவே இல்லம் ஒன்றை அமைக்க முன்வந்து அடிக்கல் நாட்டப்பட்டது.
விஜி ஜீவா தம்பதியினரால் பாண்டிருப்பில் இரண்டு வீடுகள் கட்டி கையளிக்கப்பட்டுள்ளன.