நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (22) யாழ். நகர் பகுதியில் தேவையற்று உலாவித் திரிவோருக்கு சுகாதாரப் பிரிவினரால் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் வீதியில் பயணிப்போர் வழிமறிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது.



