பொதுமக்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், முதற்கட்டமாக சகல சுகாதார பணியாளர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.


