தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு

தமிழகத்தில், மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை (23) வரையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, தமிழக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று (21) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது நடைமுறையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply