ஊரடங்கின் போதான வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனவே, அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்காக பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வர்த்தகத்துக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


