முகக்கவசங்கள் விற்பதாக கூறி போதைப்பொருள் வர்த்தகம்: 15 பேர் கைது

முகக்கவசங்களை விற்பனை செய்வதாக கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சப்புகஸ்கந்தை பகுதியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 25 வயதுடைய இரண்டு யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 50 இலட்சம் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply