திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 08 பேர் மரணித்துள்ள நிலையில் 143 பேருக்கு கொருானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 78 ஆண்களும்,65 பெண்களும் அடங்குவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 2021-08-21ம் திகதி வரை 7707 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 119 பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலைபிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 202 பேர் இதுவரை மரணித்துள்ளதாகவும், தொடர்ந்தும் பிசிஆர் பரிசோதனைகள் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


