ஊரடங்கு வேளையில் யாழில் மூவர் மீது சரமாரியான வாள்வெட்டு

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக இன்று (22) மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது எனவும் அவர்கள் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அத்தோடு தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply