உள்ளூராட்சி மன்றங்களை சட்டப்படியே கையாள வேண்டும்! – பிரதமர் தினேஷ் SamugamMedia

உள்ளூராட்சி மன்றங்களை சட்டத்தின் பிரகாரமே கையாள முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரி செயலாளரை அழைத்து இன்று கலந்துரையாடலை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இம்மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்ததன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply