கொழும்பில் சற்று முன் துப்பாக்கி சூடு! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை SamugamMedia

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.

முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை  பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

துப்பாக்கி  சூட்டு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை .

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Leave a Reply