நியூ லுக்கில் பளிச்சென்று ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனியின் நியூ போட்டோஸ்..! SamugamMedia

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.

இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருந்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.

ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

ஜனனி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்

தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *