கொழும்பில் பதற்றம்; போராட்டக்காரர்களின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த கலகத்தடுப்பு படைவீரர்! SamugamMedia

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலகத்தடுப்பு பிரிவினரின் தாக்குதலை தொடர்ந்து போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கலகத்தடுப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் மீது  கலகத்தடுப்பு பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply