முதல் தடவையாக 4,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்-வெளியானது முழு விபரம்..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஆயிரத்து 172 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 3ஆயிரத்து 110 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 282 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 390,000 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்18ஆயிரத்து 769 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply