பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் நாளாந்தச் செலவீனங்களைக் கூட ஈடு செய்ய முடியாத நிலை!SamugamMedia

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட திருகோணமலை பிரதிநிதித்துவ சங்கத்தின் ஏட்பாட்டில் இன்று புதன்கிழமை திருகோணமலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தினை முன்னிட்டு கருந்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா,
இந்த நாட்டின் பொருளாதார சிக்கல் நிலமைகள் காரணமாக சந்தோசமாக சர்வதேச மகளிர் தினத்தினை அனுஷ்டிக்க ஏதுவாக இல்லை என குறிப்பிட்டார்.
கடத்தப்பட்ட உறவுகளில் பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன, பிள்ளைகளை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். நாட்டில் காணப்படும் இந்த இக்கட்டான பொருளாதார நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் நாளாந்தச் செலவீனங்களைக் கூட ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
தற்போது மின்சாரப்பட்டியல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்து நீர்க்கட்டணம் இவ்வாறு படிப்படியாக அனைத்தும் அதிகரித்துச்செல்லும் இந்த நிலையில் பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் குறித்து இந்த அரசாங்கம் சிந்தித்து அதற்கான நடவடிக்கையினை வெகு விரைவில் எடுக்க வேண்டுமென அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply