யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மேலும் எம்.எல்.லாபி ர் அவர்கள் முஸ்லிம் மீடியா போரத்தின், யாழ் மாவட்ட இணைப்பாளராகவும்,நவமணி,விடிவெள்ளி,வீரகேசரி,தமிழ் மிரர்,மெட்ரோ நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் சேவையாற்றினார்.
அத்தோடு கலாபூஷணம் ,சாமஶ்ரீ தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய விருதுகளைப் பெற்று மிகச்சிறந்த ஊடகவியளாராக
பணியாற்றியவர்.
மானிப்பாய் வீதி பெரிய முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவராக்க் கடமையாற்றிய லாபிர் அவர்கள்,பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் மூலம் பல சமூகப்பணிகளை ஆற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


