இலங்கைக்கு இரண்டு வாரங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும்! – நிதி அமைச்சு SamugamMedia

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் இது ஒரு நாட்டிற்குக் கிடைத்த தனித்துவமான சாதனை என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான சீனாவின் எழுத்துமூல உத்தரவாதம் நேற்று இலங்கைக்கு கிடைத்திருந்தது.

இந்நிலையில் கடனுதவி எப்போது இலங்கைக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply