நாடாளுமன்றில் பெண் உறுப்பினர் உடல் ரீதியாக பழிவாங்கப்பட்டபோது பெண் உறுப்பிர்களும் சிரித்தனர் – குண்டை போட்ட டயனா! SamugamMedia

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்ற சொற்பதற்களை ஏற்றுக்கொள்ள முடியாதென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான உரிமைகள் பறிக்கப்படும் போது பெண் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் டயனா கமகே குறிப்பிட்டிருந்தார்.

எனினும் துரதிஸ்டவசமாக இந்த நாடாளுமன்றத்தில் காணுகின்ற விடயமாக தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிராக வார்த்தைகளால் மட்டுமல்ல உடல் மொழியின் ஊடாகவும் தவறான விதத்தில் பேசப்பட்ட போது சில பெண் உறுப்பினர்கள் கூட சிரித்துக்கொண்டிருந்தாக டயனா கமகே கவலை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்கள் நாடாளுமன்றத்திற்குள் இடம்பெறும் போது வெட்கமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

365 நாட்களில் ஒரு நாளை பெண்களுக்காக ஒதுக்குவதை விடவும் 365 நாட்களையும் பெண்களுக்காக ஒதுக்கவேண்டும் என்றும் டயனா கமகே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பெண்கள் வீடுகளில் எந்தவிதமான சம்பளமும் இன்றி பணியாற்றி வருவதாகவும் பெண்களே நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்று வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் எதற்காக இந்த போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர் என்றும் டயனா கமகே கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊழல் அற்ற ஆட்சியை நிறுவுவதன் மூலம் நாட்டை வங்குறோத்து நிலையில் இருந்து மீட்க முடியும் என்றும் எதனையும் முயற்சித்தால் சாதகமாக்கமுடியும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply