இந்தியா – இலங்கை புதிய ஒப்பந்தம் – இதனால் அதிக நன்மை இந்தியாவிற்கே சுட்டிக்காட்டும் பேராசிரியர்.! SamugamMedia

டொலரின் பெறுமானம் குறைகின்றது என்பதன் கருத்து, இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது என்பதையே குறிப்பதாகவும் இதனால் பொருட்களின் விலைகளிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தின் பொருளியல்துறை பேராசிரியர்.எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

எமது சமூகம் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இலங்கை டொலர் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் கொடுக்கல் வாங்கல்களை இந்திய ரூபாவில் செய்வதால் இலங்கைக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்றும் பல்கலைக்கழக்த்தின் பொருளியல்துறை பேராசிரியர் சுட்டிகக்hட்டுகின்றார்.

இந்திய வங்கியுடன் 5 வங்கிகணக்குகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் டெலரை விடவும் இந்திய ரூபாவை கையாள்வது இலங்கைக்கு நன்மை பயக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.

எனினும் இலங்கை ரூபாவின் உறுதித்தன்மையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இந்தியாவுடனான புதிய ஒப்பந்தம் நஸ்டத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார் 

இந்திய ரூபாவில் இலங்கை கொடுப்பனவுகளை ஆரம்பிக்கும் போது இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலும் அதிகரிக்கும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆதிக்கம் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து மாற்றமடைந்து பொருளாதார ஆதிக்கமாக மாற வழிவகுக்கும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தின் பொருளியல்துறை பேராசிரியர்.எஸ்.விஜயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய ரூபாவிற்கு சர்வதேச ரீதியிலான சிறந்ததொரு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் விஜயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply