அரசுடன் இணைந்து இருக்கும் காலத்தில் அதிகாரிகள் வேலை செய்யவேண்டும் – எச்சரித்த பிள்ளையான்.! SamugamMedia

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்திரந்தார்.

அரசாங்கம் தனக்கு வழங்கியுள்ள அதிகாத்தை தேவை ஏற்படின் பயன்படுத்த பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை எவரும் குழப்ப வேண்டாம் என்றும் தன்னுடைய நல்லெண்ததை பிளையாக கணிப்பிடவேண்டாம் என்றும் சந்திரகாந்தன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அரசாங்கம் தனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தனக்கு நீங்கள் சொல்லித்தர தேவையில்லை என தெரிவித்த பிள்ளையான் சுற்றுநிரூபங்களையும் 

தலைவரினால் பணிக்கப்பட்ட விடயங்களையும் செய்வதற்கு பழக்கப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

பிள்ளையான் இருக்கும் காலத்தில் அரச அதிகாரிகள் வேலைசெய்யவேண்டும் என்றும் இல்லையென்றால் இடமாற்றம் பெற்றுச்செல்லமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply