18 வயதுடைய மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை! SamugamMedia

பசறை கோணகலை பகுதியில் புதல்வரை சவரக்கத்தியால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக தந்தை புதல்வரை சவரக்கத்தியால் வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இடது கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் புதல்வர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

49 வயதுடைய தந்தை ஒருவரே 18 வயதுடைய புதல்வரை சவரக்கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply