காபந்து அரசாங்கத்தை நடத்தும் ரணிலின் ஏவல் பிரதிநிதியே ரேஹினி-காட்டமான கனகரஞ்சினி!SamugamMedia

ஐ.நாவில் 52ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த வேளையில் அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழு மூலம் தம் தாய்மார்களை சந்தித்து நாடகமாடியிருந்ததாக வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி ஜோ.கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்டப்பாதையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

தற்போது காபந்து அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஏவலின் பேரில் வருகை தந்த மனித உரிமை ஆணைக்குழுவின் பெண் பிரதிநிதியான ரோஹினி மாறசிங்க போலியான தகவல்களை தமது உறவுகள் தெரிவித்ததாக குறிப்பிட்டு தமது நீதியை கேள்விக்குறியாகியுள்ளதாக ஜோ.கனகரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பெண் பிரதிநிதியான ரோஹினி மாறசிங்க வெளியிட்ட அறிக்கையை தாம் நிராகரிப்பதாக ஜோ.கனகரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.

ஒருபோதும் இலங்கை அரசாங்கம் உண்மையான நீதியை வழங்கப்போவதில்லை என்றும் எனவே சர்வதேச நாடுகளிடம் தாம் நீதியை கோரி நிற்பதாக ஜோ.கனகரஞ்சினி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் வாழுகின்ற ஒட்டுமொத்த பெண்களுக்கும் மகளீர் தினம் என்பது ஒரு துக்க நாள் என வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி ஜோ.கனகரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply