படிக்க வந்த சிறுமியர்களிடம் சல்லாபம்: ரியூசன் மாஸ்ட்டரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!SamugamMedia

படிக்க வரும் சிறுமிகளை ஏமாற்றி தவறாக நடந்து கொண்ட ரியூசன் மாஸ்ட்டர் கைது செய்யப்பட்டுள்ளமை பெற்றோர்களிடம் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

தெலுங்கானா மாநிலம் ஹைராபாத் சனஸ் நகரினை சேர்ந்த பஷீர் என்னும் இளைஞன் 8 ஆம் வகுப்பு வரையான மாணவ, மாணவியர்களிற்கு ரியூசன் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ரியூசன் எடுக்கும் நேரம் போக சிறுமிகளிற்கு  மட்டும் கம்ப்யூட்டரில் கேம் சொல்லி தருவதாக கூறி அவர்களை மட்டும் தனியாக அழைத்துள்ளார்.

அவ்வாறு சென்ற சிறுமியர்களை மடியில் அமர வைத்தது மட்டுமன்றி சிறுமிகளிற்கு ஆபாச படங்களினை காட்டி அவர்களிடமிருந்து முத்தங்களினை பெற்று  தகாத நடத்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி  பஷீரின் ரியூசன் வகுப்பறையிலிருந்த கமராவில் பதிவாகியிருந்த நிலையில் அது பெற்றோரின் கண்களிற்கு எட்டியுள்ளது.

பொது மக்களை திரட்டியவாறு  பஷீரிடம் விரைந்த பெற்றோர் இது தொடர்பாக கேட்க  திமிராக மறுத்துள்ளார் அவர்.

இதனால் கோபமடைந்த பெற்றோரும், பொது மக்களும்  சேர்ந்து பஷீரை வெளுத்து வாங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்த பொலிசாரிடம்  பெற்றோர், பஷீரை கையளித்த நிலையில் பொலிசார் அவரை கைதுசெய்துள்ளனர்.

Leave a Reply