தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடையுமா….??? நகைக் கடை உரிமையாளர்கள் தெரிப்பது என்ன…??? SamugamMedia

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடரச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் மக்கள் வாங்குவதில் பின்நிற்பதாக யாழ் மாவட்ட நகைகடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைவதனால் தமக்கு மகிழ்ச்சி என்றும் அவ்வாறு விலை குறைந்து நிலையான விலை எட்டுப்போது மக்கள் அதிகளிவில் கொள்வனவுகளை மேற்கொள்வார்கள் என்றும் யாழ் மாவட்ட நகைகடை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று 10ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இவ்வாறு சடுதியாக அதிகளவான விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன..???

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்கள் தற்போதைய விலையில் தங்கத்தினை வாழ்கவேண்டாம் என்றும் மேலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தங்கத்தின் குறையும் போது மக்கள் அதனை வாங்க மறுப்பதாகவும் ஆனால் நாளையதினம் 5 ஆயிரம் கூடுமாக இருந்தால் மக்கள் தங்கத்தை கொள்வனவு செய்யுமாறும் யாழ் மாவட்ட நகைகடை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும் போது தமது வியாபாரமும் இரட்டிப்பாக மாறும் என்றும் யாழ் மாவட்ட நகைகடை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்கத்தின் விலையை தீர்மானிப்பது டொலர் என்றும் இதன் வீழ்ச்சியே தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வரையில் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாக யாழ் மாவட்ட நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply