யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் தனியார் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த சுற்று வட்டத்தின் நடுப்பகுதியில் வைப்பதற்கான திருவள்ளுவர் சிலை இந்தியாவின் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் தற்சமயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்த பணிகள் பூர்த்தியடைந்து குறித்த சுற்றுவட்டம் மாநகரத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தினை யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன், அதனை சார்ந்த உறுப்பினர்கள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.