போராட்டங்களால் ஆட்சியை மாற்ற முடியாது எனவும் நாட்டின் பொருளாதாரமே சீர் குலையும் எனும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய சாந்த பண்டார,
நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் சகல தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது எனவும் அனைவரும் ஒன்றாக முன்னோக்கி செல்லவில்லை என்றால் மீண்டும் ஆரம்ப இடமான வங்குரோத்து நிலைக்கே செல்ல வேண்டி ஏற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டெழும் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் விதமாக வீதிகளில் இறங்கியும், வீதிகளை மறித்தும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காவிட்டாலும் இவ்வாறானதொரு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களை நிறைவேற்ற குறைந்தது இன்னும் ஒருவருடத்தையேனும் வழங்குங்கள் என்றும் சாந்த பண்டார கோரிக்கை விடுத்தார்.