மஹிந்தவின் கட்சியின் முக்கிய பதவிக்கு ஏற்பட்ட நிலை!SamugamMedia

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவிக்கு அரசியல் சார்பற்ற சிவில் சமூக நபர் ஒருவரை நியமிப்பது குறித்து பொதுஜன பெரமுன (SLP) அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் வினவிய போது, ​​

இவ்வாறான ஒருவரை நியமிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக தலைவர் பதவிக்கு மேலும் பல வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கட்சியை விட்டு வெளியேறிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என திரு.சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply