யாழ். மாநகர சபையின் முக்கிய நிகழ்வு நாளை!SamugamMedia

யாழ். மாநகர சபையின் நடமாடும் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தட்டா தெரு சந்தியில் உள்ள கலாஜோதி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் 1,2, 9 ஆம் வட்டாரங்களுக்கான ஆதனவரி அறிவித்தல் படிவம் – சோலைவரி வழங்கல், பெயர் மாற்ற விண்ணப்பப் படிவம் வழங்கல், சைக்கிள் உரிமம் வழங்கல் போன்ற சேவைகளை வழங்கப்படுவதுடன் பொது மக்களால் இதுவரை காலம் செலுத்தாதுள்ள ஆதன வரி நிலுவைகள் மற்றும் நடப்பாண்டு ஆதனவரி போன்றவற்றைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெறப்படும் வரிப் பணத்தைக் கொண்டு யாழ். மாநகர சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் நடப்பாண்டு ஆதன வரியை முழுமையாகச் செலுத்தும் பட்சத்தில் இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டுக்கான ஆதன வரியில் 5 வீத கழிவைப் பெற முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply