எழுச்சியின் கரங்கள்” பெண்கள் அமைப்பின் எழுச்சிப்பேரணி! SamugamMedia

அமுதசுரபி அறக்கட்டளையின் அனுசரணையில் “எழுச்சியின் கரங்கள்” பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகளிர்தினமும், எழுச்சி பேரணியும் சிதம்பரநகர் சக்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.


 
அமைப்பின் தலைவர் லோகேஸ்வரி விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வுநிலை நூலகர் பாமினி உருசந்திரன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக ஓய்வுநிலை ஆசிரியர் செம்மனச்செல்வி தேசிகன் கலந்து கொண்டார். 
முன்னதாக நிகழ்வு இடம்பெறும் மைதானம்வரை பெண்களின் பங்குபற்றுதலுடன்  மாபெரும் எழுச்சிப்பேரணி இடம்பெற்றிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டதுடன்,
பெண்களின் விலங்கை உடைக்கும் ஆயுதம் கல்வியே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும், போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்
நிகழ்வில் பெண்கள், சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் மற்றும், மகளிர் கௌரவிப்பு, பரிசளிப்பு போன்றன இடம்பெற்றது.

Leave a Reply