கடும் உஷ்ணத்தில் பரீட்சை எழுதும் துர்ப்பாக்கிய நிலையில் பாடசாலை மாணவர்கள்! தமிழர் பகுதியில் அவலம் SamugamMedia

மாணவர்கள் கடும் உஷ்ணத்தில் பரீட்சை எழுதும் துர்ப்பாக்கிய நிலை.

2022ம் ஆண்டுக்கான 3ம் தவணை பரீட்சை நடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது. வலய மட்டத்திலான பரீட்சை இடம்பெற்று வருகிறது.

கிளி/புனித தெரசா பெண்கள் கல்லூரியின் தரம் 11 மாணவர்களுக்கான பரீட்சை மண்டபங்களின் வெளியே பரீட்சை நடாத்தப்படுகிறது.

தற்போது கடுமையா வெப்பம் நிலவியுள்ள காலநிலையில் மாணவர்கள் நிழலுக்காக குடையைப் பிடித்தவாறு பரீட்சை எழுதியுள்ளனர்.

பாடசாலையில் போதியளவு இடவசதி இருந்தும் இவ்வாறு மாணவர்களை வெய்யிலில் பரீட்சை எழுத வைத்துள்ள கல்லூரி நிருவாகத்தினரின் பொறுப்பற்ற தனத்தை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வன்மையான கண்டணத்தை சமூகவலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply