மேலும் 40 டன் மருத்துவ பிராணவாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அத்தோடு ,குறித்த கப்பல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 100 டன் பிராணவாயுவுடன் இந்தியாவின் சக்தி கப்பல் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


