கடந்த 24 மணிநேரத்தில் 502 பேர் கைது-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56ஆயிரத்து 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், ஆயிரத்து 509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply