
”சக்தி” கப்பல் 100 மெட்றிக்டொன் ஒட்சிஜனுடன் கொழும்பு வந்தடந்தது!

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சக்தி எனும் கப்பல் மேலும் ஒரு தொகை ஒக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் ஊடாக 40 மெட்றிக்டொன் ஒட்சிஜன் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.-
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுவருவதற்காக குறித்த கப்பல் கடந்த 17 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான சக்தி எனும் கப்பல் 100 மெட்றிக்டொன் ஒட்சிஜனுடன் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

