அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோரும் தாம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகிறோம் என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

இதனை இராணுவ தளபதியும், தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனைப்படி விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை.

வீதித்தடைகளில் உள்ள பொலிஸார், இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply