யாழில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 ஐ தொட்டது

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்ததை அடுத்தே இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் (22) உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரி அனுப்பப்பட்ட 62 வயதுடைய ஆண் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைக்காக மாதிரி அனுப்பப்பட்ட 65 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply