ஜம்மு – காஷ்மீரின் நிலை குறித்து ஆராய சிறப்பு குழு நாளை கூடுகிறது!

ஜம்மு – காஷ்மீரின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக குப்கர் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது.

இது குறித்து அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகையில், ‘குப்கர் கூட்டணியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் குறித்த கூட்டம்  நடைபெறவுள்ளது.

முந்தைய கூட்டங்களில் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மட்டும் பங்கேற்றனர் . இந்தக் கூட்டத்தில்  கட்சிகளின் அடுத்த நிலைத்  தலைவர்களும்  பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஜம்மு -காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. கூட்டணியின் செயல்பாடுகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply