சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

சுற்றுலாதுறையினை மீண்டும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்கான அனுமதி அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டதன் பின்னரே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகள் மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை கொண்ட விருந்தகங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், இந்தியாவுடன் சேவையினை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏனைய விமான சேவைகள், தமது சேவைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கப்பட்டுள்ள நிலையிலும், அடுத்த வாரம் இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகள் வனவிலங்கு சரணாலயங்கள், பூங்காக்கள் மற்றும் மத்திய கலாசார அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள பாரம்பரிய பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply