ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு!

<!–

ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு! – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியர் பொரளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நோயாளர் ஒருவருக்கு கடந்த 15ஆம் திகதி குறித்த வைத்தியர் சிகிச்சை வழங்கிய சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனால் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply