நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு

நாட்டில் தற்போது சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக சீமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையால் உள்ளூர் சீமெந்து உற்பத்தியும் தடைபட்டுள்ளது.

கட்டுமானத்துறையில் சீமெந்து பற்றாக்குறையால் சில வியாபாரிகள் சீமெந்தை அதிக விலைக்கு விற்கிறார்கள் என்றார்.

Leave a Reply