சமுர்த்தி பயனாளிகளுக்கு 2,000 இல்லை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டைத் தற்காலிகமாக மூடியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு அரசிடமிருந்து எந்தவிதமான கொடுப்பனவையும் பெற்றுக் கொள்ளாத, குறைந்த வருமானமுடைய, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அரச உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்றவர்கள், சமூர்த்திப் பயனாளிகள், முதியோர் நூற்றாண்டுப்பூர்த்தி, அங்கவீனர் கொடுப்பனவு போன்ற அரசின் மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் இதற்குத் தகுதி பெறமாட்டார்கள்.

இந்தக் கொடுப்பனவைச் செலுத்துவதற்குத் தேவையான மேலதிக ஒதுக்கீடு திறைசேறியினால் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினதும் கிராமியக் குழுவினதும் உதவியுடன் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் ஊடாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பொருத்தமான முறைமையொன்றின் கீழ் பயனாளிகளுக்கு இந்தக் கொடுப்பனவைச் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவை ஏற்புடைய பயனாளி பெற்றுக்கொண்டார் என்பதற்கான சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 467 மில்லியன் ரூபா திறைசேரியூடாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply