இன்று முதல் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாண் ஒரு இறாத்தல் 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பனிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுகர்விற்கு உரிய வகையில் தங்களின் உற்பத்திகளை மேற்கொள்வதால், விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply