கொரோனா தொற்று முடக்க நிலை மூன்றாவது நாளாக இன்றும் மன்னார் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது நகர மத்திய பகுதி வர்த்தக நிலையங்கள் உட்பட போக்குவரத்து சேவைகள் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் தேவை கருதி ஒரு சில நடாமாடும் வியாபார சேவைகளுக்கு மன்னார் மாவட்டதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதே நேரம் மன்னார் நகர் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றைய தினம் காலை தொடக்கம் மதியம் ஒரு மணிவரை மக்களுக்கான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன
அத்தோடு விவசாய செயற்பாடுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளும் மன்னார் மாவட்டத்தில் சாதாரண அளவில் இடம் பெற்றுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது


