3 வாரங்களாவது நாட்டை முடக்குமாறு கோரிக்கை

முடக்கம் குறித்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 வயதுக்கு மேற்பட்டோரில் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களையும், ஒரு தடுப்பூசியைக் கூடபெறாதோரையும் கொண்டு ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆய்வில் ஒரு தடுப்பூசியையேனும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோர் ஏனையோரை விட தொற்றுக்குள்ளாகும் வீதம் 9 மடங்கு அதிகமாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 60 வயதுக்கு மேற்பட்டோர் தாமதிக்காமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசியைப் பெறுவது மாத்திரமே இதற்கான தீர்வு அல்ல.

எனவே 3 வாரங்களாவது நாடு முடக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக 10 நாட்களின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்று பரவும் வீதம் என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

Leave a Reply