முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு, வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசிபோடும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை 23.08.2021 இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் முத்துவிநாயகபுரம், தட்டயமலை, ஒலுமடு ஆகிய கிராமங்களில் இராணுவத்தினரும், கிராமசேவையாளர்களும், இராணுவ வைத்தியர்களும் இணைந்து மக்களுடைய வீடுகளுக்குச் சென்று, 60வயதிற்கும் மேற்பட்டவர்ளை உறுதிப்படுத்தி சைனோபோர் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதாலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுவதாலும், இவ்வாறு மக்களின் வீடுகளுக்குச்சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


