திருமலை மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட இக் காலப்பகுதியில், திருகோணமலை நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

அத்தியவசிய சேவைகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் பாதைகளில் பயணிப்பதுடன் நகரின் சந்திகளிடையே பாதுகாப்பு கடமைகளில் பாதுகாப்பத்தரப்பினர் மற்றும் பொலிசாரும் தொடராக இன்று திங்கட்கிழமையும் (23) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட இக்காலப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பிரத்தியேக ஒழுங்குகள் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலிற்கிணங்க பிரதேச செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்காலப்பகுதியில் மக்கள் கொரோனா பரவல் ஏற்படா வண்ணம் பொறுப்புடன் செயற்படுவதுடன் சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களிடம் வேண்டிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply