ஊரடங்கை நீட்டித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, ”டெல்டா வைரஸ் இன்னமும் உச்சம் அடையவில்லை. எனவே, நியூசிலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 31ஆம் திகதிவரை கட்டுப்பாடுகள் தொடரும். கரோனா பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்த 13,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

நியூசிலாந்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Leave a Reply