மற்றுமொரு குற்றச்சாட்டில் சிக்கிய ரிஷாட் பதியுதீன்; விசாரணைகள் ஆரம்பம்

சிறைச்சாலை வைத்தியரை ரிஷாட் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் நோயாளர்களை பரிசோதிக்கும் அறைக்குள் வைத்து, கடமை நேர வைத்தியருக்கு இடையூறு விளைவித்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமும் பொரளை பொலிஸ் நிலையத்திலும் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் வைத்தியரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Leave a Reply