இஷாலினி வழக்கில் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்

இஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி இஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply