யாழில் வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு

யாழில் வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரை வீதியில் நேற்று (22) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சையில் பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இல்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply