வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதுளை – மஹிலகஸ்தென்ன பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தனியாக வசித்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


