பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?

கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சு ஆராய்ந்து வருவதாக கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் சில வகுப்புகளை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா? அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா? என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply